Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

மக்களவைத் தேர்தல்! தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க., ஆர்வம்!

ravi by ravi
30 January 2024
in செய்திகள்
0
மக்களவைத் தேர்தல்! தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க., ஆர்வம்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் முழுமூச்சில் இறங்கியுள்ளன. தேசிய அளவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றவும் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜயகாந்த் அலை:

இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. பக்கம் ஏற்கனவே காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், வி.சி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் உள்ளன. இன்னும் சில கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க.வும் தங்கள் தரப்பில் கூட்டணி பங்கீட்டிற்கான பணியை தொடங்கி உள்ளனர்.

இந்த சூழலில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. கவனம் தே.மு.தி.க. பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் கட்சியை தொடங்கியபோது இந்த இரண்டு பிரம்மாண்ட கட்சிகளுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்திய கட்சி தே.மு.தி.க. அதற்கு ஒரே காரணம் நடிகர் விஜயகாந்த்.

தே.மு.தி.க. யார் பக்கம்
?

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி காலமானார். அவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் அவரது நினைவிடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் விஜயகாந்த அலை வீசி வருவதால் தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்கும் கட்சிகளுக்கு அனுதாப அலை மூலமாக வாக்குகள் குவியும் என்று கருதப்படுகிறது. இதனால், இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் தே.மு.தி.க. பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர். திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பா.ஜ.க.வும் தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகின்றனர்.

கூட்டணிக்கு போட்டி

ஏனென்றால், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட பிறகு பா.ஜ.க. தனித்து உள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணியில்லை என்று அ.தி.மு.க. திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால், தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுத்தால் வாக்கு வங்கி பலப்படும் என்று பா.ஜ.க. கருதுகிறது இன்னும் சில தினங்களில் தே.மு.தி.க. யார் பக்கம் என்பது தெரிந்து விடும். எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட தலைமையில் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தே.மு.தி.க. தங்கள் பக்கம் இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்று அ.தி.மு.க. கருதுகிறது.

அதேசமயம் தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே ஏராளமான கட்சிகள் இருப்பதால், தே.மு.தி.க.வும் இணைந்தால் மற்ற கட்சிகளுக்கு குறைந்த அளவிலான தொகுதிகளே கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.

Tags: admkcaptain vijayakanthDMDDMKindiaLok Sabha ElectionLok sabha Election 2024tamilnaduvijayakanth
Previous Post

TNPSC தேர்வுக்கு தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்! எப்படி சேர்வது? முழு விவரம்

Next Post

Valentine’s Day: காலமெல்லாம் உடனிருக்கும் காதல் துணையை தேர்வு செய்வது எப்படி?

ravi

Valentine's Day: காலமெல்லாம் உடனிருக்கும் காதல் துணையை தேர்வு செய்வது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023