தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களில் ஒருவர் அஜித்குமார். துணிவு படத்திற்கு பிறகு கடந்த ஓராண்டாக இவரது எந்த படமும் வெளியாகவில்லை. இவர் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்ப தற்போது நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித் பட அப்டேட்டுகள்:
இந்த நிலையில், இந்த படத்திற்கு பிறகு அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு பிறகு அவர் கே.ஜி.எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் பெயரைத் தவிர எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை இல்லை. நாளை மறுநாள் விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் அப்டேட்டும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்
இந்தாண்டு அஜித்குமார் பிறந்தநாள் அல்லது தீபாவளிக்கு அஜித்தின் திரைப்படம் ஒன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டாக அஜித் படத்தின் எந்த அப்டேட்டும் இல்லாத நிலையில், 2024ம் ஆண்டு அஜித்குமாரின் ஆண்டாக அமைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.














