நடிகர் விஜய் சமீபகாலமாகவே தனது மக்கள் இயக்கம் மூலமாக ஏராளமான தொண்டுகளை செய்து வருகிறார். அவரது மக்கள் நல இயக்கத்தின் செயல்பாடுகளும், நடிகர் விஜய்யின் செயல்பாடுகளும் அவர் அரசியலில் களமிறங்கப்போகிறார் என்பதை உறுதியாக காட்டுகிறது.
நெல்லையில் விஜய்:
நடப்பு டிசம்பர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் மிக கடுமையாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டது. மிக்ஜாம் புயல் தாக்கம் ஓய்வதற்குள் தென் தமிழகத்தில் பெய்த பேய் மழையால் நெல்லை, தூத்துக்குடியில் இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டு வெள்ளத்தில் மிதந்தது.
பலரும் நெல்லை, தூத்துக்குடியில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில் நடிகர் விஜய் திருநெல்வேலி சென்றுள்ளார். நேற்று முன்தினம் நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் இன்று அதிகாலை நெல்லை சென்றுள்ளார்.
பரபரப்புக்கும் அரசியல்
அவர் இன்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண பொருட்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூற உள்ளார். நடிகர் விஜய்யை நெல்லை மாவட்ட அவரது மக்கள் இயக்க நிர்வாகிககள் நேரில் சென்று வரேவற்றனர். நடிகர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்காக பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அவர் நெல்லையில் இன்று மக்களை சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














