Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Mohammed Shami: சாமியாக மாறிய ஷமி! ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா?

ravi by ravi
16 November 2023
in செய்திகள், விளையாட்டு
0
Mohammed Shami: சாமியாக மாறிய ஷமி! ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகக் கோப்பை 2023 தொடருக்கான இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக அகமதாபாத்திற்குள் கால் எடுத்து வைத்துள்ளது இந்திய அணி. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மிரட்டிய ஷமி:

இந்திய அணியின் வெற்றிக்கு ரோகித்சர்மா, சுப்மன்கில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் அபாரமான பேட்டிங் காரணம் என்றால், பந்துவீச்சில் தனி ஆளாக அணியை வெற்றிக்கு நடத்திச் சென்ற பெருமை முகமது ஷமியையே சாரும். முகமது ஷமி தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெற வைத்தார் என்றே சொல்ல வேண்டும்.

இந்திய அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு எதிராக பும்ரா தொடக்கத்தில் ஒயிடாக வீச, அடுத்து வந்த சிராஜூம் ஒயிட்களை வழங்க உடனடியாக ஷமியை பந்துவீச கொண்டு வந்தார் கேப்டன் ரோகித்சர்மா. முகமது ஷமி பந்துவீசினால் கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்ற ரோகித்சர்மாவின் கணிப்பு மிகவும் சரியாக அமைந்தது. ஏனென்றால் ஆபத்தான கான்வே மற்றும் இந்த தொடர் முழுவதும் அதிரடியால் மிரட்டிய ரவீந்திராவையும் அடுத்தடுத்த ஓவர்களில் முகமது ஷமி காலி செய்தார்.

காலியான நியூசிலாந்து:

அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கனே வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் நங்கூரம் போல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்களின் பேட்டிங்கால் 39 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த நியூசிலாந்து அணி 100 ரன்கள், 200 ரன்களை கடந்து சென்று கொண்டிருந்தது. ஜடேஜா, குல்தீப் யாதவ் என சுழலை பயன்படுத்தியும் ஆட்டத்தில் எந்த மாற்றமும் வரவில்லை. மீண்டும் ஷமியை கொண்டு வந்தார் கேப்டன் ரோகித்சர்மா.

ஷமியின் பந்துவீச்சில் அபாரமாக ஆடிக் கொண்டிருந்த வில்லியம்சன் 69 ரன்களுக்கு அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் டாம் லாதமையும் டக் அவுட்டாக்கினார். நியூசிலாந்தின் வலுவான முதல் 4 விக்கெட்டுகளையும் முகமது ஷமியே காலி செய்ய, மீண்டும் பார்ட்னர்ஷிப் அமைத்த பிலிப்ஸ் – மிட்செல் ஜோடியை பும்ரா பிரித்தார். கடைசியில் இந்திய அணிக்கு தொடக்கம் முதலே ஆபத்தாக இருந்த டேரில் மிட்செலையும் முகமது ஷமி அவுட்டாக்க இந்திய வீரர்கள் நிம்மதி அடைந்தனர்.

7 விக்கெட்டுகள்:

இந்த போட்டியில் சவுதி, பெர்குசன் ஆகியோரையும் அவுட்டாக்கி ஆட்டத்தை சுபமாக முடித்து வைத்தார் முகமது ஷமி. மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி மிரட்டலாக பந்துவீசினார். கான்வே, ரவீந்திரா, வில்லியம்சன், மிட்செல், டாம் லாதம் என அவர் அவுட்டாக்கிய 7 பேர்களில் இந்த 5 பேர் ஆட்டத்தையே மாற்றக்கூடியவர்கள்.

இத்தனை சாதைனைகளா?

இது மட்டுமின்றி ஒரே உலகக்கோப்பையில் 3 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற மகத்தான சாதனையையும் முகமது ஷமி படைத்துள்ளார். மேலும், ஒருநாள் உலகக்கோப்பையில் 4 முறை 5 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் கைப்பற்றிய வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் வேறு எந்த இந்திய வீரரும் 2 முறை கூட 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதில்லை. ஆனால், முகமது ஷமி 4 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டியுள்ளார்.

சர்வதேச அளவிலும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் எந்த வீரரும் 4 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதில்லை. இந்தியாவிற்காக ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையையும் முகமது ஷமி படைத்துள்ளார்.

மேலும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஒரே போட்டியில் 7 விக்கெட்டை வீழ்த்திய 5வது வீரர் என்ற மகத்தான சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்பு 1983ம் ஆண்டு வின்ஸ்டன் டேவிஸ், 2003ம் ஆண்டு கிளென் மெக்ராத், 2003ம் ஆண்டு ஆண்டி பைசெல், 2015ம் ஆண்டு டிம் சவுதி, தற்போது முகமது ஷமி படைத்துள்ளனர்.

Tags: INDvsNZMohammed Shamiodi world cupODI World Cup 2023Shami 7 wickets
Previous Post

Virat Kohli 50th Century: 11 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சாதனை! சச்சின் கண் முன்னே ஒரே நாளில் உடைத்த விராட் கோலி!

Next Post

Thalapathy 68: மோகன், பிரசாந்த் வாழ்வில் விடியலைத் தருமா விஜய் படம்?

ravi

ravi

Next Post
Thalapathy 68: மோகன், பிரசாந்த் வாழ்வில் விடியலைத் தருமா விஜய் படம்?

Thalapathy 68: மோகன், பிரசாந்த் வாழ்வில் விடியலைத் தருமா விஜய் படம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023