உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நேற்று இரவு 12 மணிக்கு கோவில் கடற்கரை பகுதியில் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடைபெறும் குலசை திருவிழா உலகப்புகழ்பெற்றது ஆகும்.
மகிஷா சூரசம்ஹாரம்:
தசரா திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. திருவிழா நாட்களில் நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விரதம் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் காளி, அம்மன், குரங்கு உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை பெற்று கோவில் உண்டியலில் செலுத்தி வந்தனர். குலசை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு 12-மணிக்கு வெகு விமர்சியைாக நடைபெற்றது.
வதம் செய்த அம்பாள்:
இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக குவிந்த பக்தர்களை காட்டிலும் நேற்று காலை முதலே பல வேடமணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். மஹிசாசூரனை வதம் செய்ய அம்பாள் மஹிசாசூரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளினார். அம்பாளுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
கோவில் கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்களின் கரகோசத்தில் சூரனை அம்பாள் மகிஷாசூரவர்த்தி அவதாரத்தில் வதம் செய்தார். முதலில், தன் முகம் கொண்ட மஹிசாசூரனை வதம் செய்யும் அம்பாள், 2-வதாக சிங்க முகமாக அவதாரம் எடுக்கும் சூரனை வதம் செய்தாள்.
3-வதாக எருமை முகமாகவும், 4வதாக சேவலாகவும் வரும் சூரனை வதம் செய்தாள் அம்பாள். குலசை திருவிழாவை முன்னிட்டும், சூரசம்ஹார நிகழச்சியை முன்னிட்டும் 3000- க்கும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.














