ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி சொதப்பலாக தொடங்கினாலும் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஆசியகோப்பை:
இந்த வெற்றி இந்திய அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி இந்த வெற்றியை பெற்றிருப்பதால் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித்சர்மா மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். அவர் பார்முக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட்கோலி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
பேட்டிங்
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பிய கே.எல்.ராகுலும் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசினார். ஹர்திக் பாண்ட்யா, இஷன்கிஷன் ஆகியோரும் மிடில் ஆர்டரில் கலக்க, தொடக்க வீரர் சுப்மன்கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை அளித்து வங்கதேச அணிக்கு எதிராக சதத்தையும் பதிவு செய்தார். இந்தியாவின் பேட்டிங்கை பொறுத்தவரையில் இந்த தொடரைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருந்தது.
நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா சொதப்பலாக பந்துவீசினாலும், அந்த போட்டிக்கு பிறகு நடந்த சூப்பர் 4 சுற்று, இறுதிப்போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு பாராட்டும் வகையிலே இருந்தது. குறிப்பாக, இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வெறும் 50 ரன்களுக்கு சுருட்டியது மிக மிக அபாரமான ஒன்றாகும்.
மொத்தத்தில் தொடர் தொடங்குவதற்கு முன்பு பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.














